மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சுங்கச் சாவடி: நெரிசலைக் குறைக்க திட்டம்!

சுங்கச் சாவடி: நெரிசலைக் குறைக்க திட்டம்!

சுங்கச் சாவடிகளில் ஏற்படும் கால தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் போன்றவற்றைக் குறைக்க சில மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி போக்குவரத்து நெரிசல் மற்றும் கால தாமதம் போன்றவற்றைக் குறைக்க முக்கிய நகரங்களில் இருந்து 50 கி.மீ. தொலைவுக்கு அப்பால் சுங்கச் சாவடிகளை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. சுமார் 2,00,000 பேர் வாழும் நகரங்கள் முக்கிய நகரங்களாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதற்கான திட்டங்களை இறுதி செய்து அமைச்சரவைக்கு அனுப்பவுள்ளோம். இதற்கான கருத்துகளை கேட்ட பின்னர், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்" என்றார். இந்தப் பணியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் கால தாமதம் ஆவதைக் குறைக்க இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மை ஃபாஸ்ட் டேக் மற்றும் ஃபாஸ்ட் டேக் ஆகிய இரண்டு செயலிகளை அறிமுகம் செய்தது நினைவுகூரத்தக்கது. இதன் மூலம் மின்னணு கட்டணம் செலுத்தும் முறை நாடு முழுவதும் உள்ள 300 சுங்கச் சாவடிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon