மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

சாஹா தவறவிட்டதைப் பிடித்த பார்திவ்

சாஹா தவறவிட்டதைப் பிடித்த பார்திவ்

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்கான இந்திய அணி நேற்று (டிசம்பர் 4) அறிவிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் தொடர்கள் முடிவுற்ற பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதால், அதற்காக விராட் கோலி தலைமையிலான 17 வீரர்கள் கொண்ட அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் மொத்தம் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி 17 பேர் கொண்ட அணியில் பார்திவ் பட்டேல் இடம்பெற்றுள்ளார். சாஹா சிறப்பாக விளையாடினாலும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிறைய கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளார். எனவே அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பார்திவ் பட்டேல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பார்திவ் பட்டேல் அனுபவமுள்ள பேட்ஸ்மேன் என்பதால் அவர் அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

இந்திய அணியில் விராட் கோலி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், சதீஸ்வர் புஜாரா, ஷிகர் தவன், ரஹானே, ரோஹித் ஷர்மா, விர்த்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, பார்திவ் பட்டேல், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், மொஹமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon