மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 டிச 2017

ஜெயம் ரவிக்கு ஜோடி தெலுங்கு நடிகை!

ஜெயம் ரவிக்கு ஜோடி தெலுங்கு நடிகை!

தெலுங்கு நடிகை ரா‌ஷி கண்ணா தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சுந்தர்.சியின் சங்கமித்ரா, அஹமத் இயக்கவுள்ள புதிய படம் மற்றும் அறிமுக இயக்குநர் கார்த்தி தங்கவேலு படம் என ஜெயம் ரவி அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் கார்த்தி தங்கவேலு இயக்கவிருக்கும் படத்தை ஹோம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ரா‌ஷி கண்ணா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்கவுள்ள இதற்கு சத்யா ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இதன் ஆரம்பகட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டைட்டில், துணை நடிகர்கள் குறித்த விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

செவ்வாய் 5 டிச 2017