மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

ஹாலிவுட் ரீமேக்கில் ஏ.ஆர். முருகதாஸ்

ஹாலிவுட் ரீமேக்கில் ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஹாலிவுட் படம் ஒன்றை ரீமேக் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் 62வது படத்தை இயக்குவதற்கான வேலையில் தீவிரம் காட்டி வரும் முருகதாஸ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றை ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கிளையண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி ஹாலிவுட்டில் ஹிட்டடித்த திரைப்படம் `மில்லியன் டாலர் பேபி'. இந்தப் படத்தை இந்தியில் முருகதாஸ் இயக்க இருக்கிறார்.

கிளையண்ட் ஈஸ்ட்வுட் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், ஹிலாரி ஸ்வாங்க் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் மரினா கவுரும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிப்பது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் மரினா பகிர்ந்துள்ளார்.

“அக்‌ஷய் குமாருடன் நடிப்பது ஒரு கனவு. மாடலிங் உலகிலிருந்து சினிமாவில் நடிக்க வந்தது என்பது பெரும் போராட்டமே. நிச்சயம் ஒருநாள் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை” எனக் கூறியுள்ளார்.

மரினா சி.ஐ.டி. என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துள்ளார். மேலும் சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon