மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

பிளஸ் 2 துணைத் தேர்வு : மறுகூட்டல் ரிசல்ட்!

பிளஸ் 2 துணைத் தேர்வு : மறுகூட்டல் ரிசல்ட்!

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான மறு கூட்டல் முடிவுகள் இன்று (டிசம்பர் 5) பிற்பகல் அரசுத் தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியாகிறது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் அக்டோபர் 31ஆம் தேதி தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதில் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது அந்தப் பணிகள் முடிந்து முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரங்களை www.tndge.in என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon