மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை!

வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை!

திருப்பூரில் வேலை பார்க்கும் "வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்" என திருப்பூர் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை மட்டும் சேர்ந்தவர்கள் இல்லாமல் மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் பல லட்சம் பேர் இங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களில், குற்றப்பின்னணி உள்ள சிலரும் தொழிலாளிகள் போர்வையில் இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். வெளி மாநிலப் போலீஸார் திருப்பூர் வந்து, குற்றப்பின்னணி உள்ள வடமாநிலத் தொழிலாளிகளைத் தேடுவதும், அதில் சிலரைக் கைதுசெய்து அழைத்துப்போவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சில சமயம், இந்த வடநாட்டுத் தொழிலாளிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே, வெளி மாநிலத் தொழிலாளிகளை சரியாக அடையாளம் காணும் வகையில், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், அடையாள அட்டை இல்லாத தொழிலாளிகள் மீதும் அவர் வேலைபார்க்கும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon