மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

கல்விக்குச் செலவிடும் ஐடி நிறுவனங்கள்!

கல்விக்குச் செலவிடும் ஐடி நிறுவனங்கள்!

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை, பெரு நிறுவன சமூகப் பொறுப்பின் கீழ் கல்விக்கு அதிகம் செலவு செய்து வருவதாகத் தேசிய மென்பொருள் சேவைகள் கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெரு நிறுவன சமூகப் பொறுப்பின் (CSR)தலைமை மாநாட்டில் நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2016-17 நிதியாண்டில் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் மொத்த செலவில் 76 சதவிகிதப் பணத்தை கல்விக்காகச் செலவிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து 18 சதவிகிதப் பணத்தை ஆண், பெண் சமத்துவத்திற்கும், 12 சதவிகிதப் பணத்தை பசி மற்றும் பட்டினியைப் போக்கவும் செலவிட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

’மாற்றங்களை மாற்றுதல்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் 62 சதவிகித இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் 100 சதவிகிதம் கல்வி மற்றும் சமூக அக்கறைக்காக செலவிட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனங்கள், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியின் விதிமுறைப்படி 2 சதவிகித லாபத்தை இதுபோன்ற செலவுகளுக்குப் பயன்படுத்தி வருவதாக ஒப்புக்கொண்டுள்ளன. இதில் 100 கோடிக்குக் கீழ் விற்றுமுதல் கொண்ட சிறிய நிறுவனங்களும் 100 சதவிகிதம் செலவு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆய்வில் 58 சதவிகித பெரு நிறுவனங்களும், 53 சதவிகித நடுத்தர நிறுவனங்களும், 73 சதவிகிதம் சிறிய நிறுவனங்களும் 100 சதவிகிதம் கல்விக்காக செலவு செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் வெறும் 5 சதவிகிதத்துக்குக் குறைவான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே 50 சதவிகிதத்துக்கும் கீழ் செலவு செய்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon