மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

கேஸ்பர்ஸ்கை : எச்சரிக்கை விடும் அமைப்பு!

கேஸ்பர்ஸ்கை : எச்சரிக்கை விடும் அமைப்பு!

லண்டனைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் கேஸ்பர்ஸ்கை சாப்ட்வேர் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல என்ற தகவலை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் ஆன கேஸ்பர்ஸ்கையினை பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சியரன் மார்டின் லண்டன் அரசிற்கு எழுதிய கடிதத்தில், ரஷ்ய நாட்டின் செயல்முறைகள் நமது நாட்டிற்கு எதிராக உள்ளன. அவர்கள் வழங்கிய சாப்ட்வேர்களால் நமது நாட்டின் தகவல்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே கேஸ்பர்ஸ்கை பயன்பாட்டினை உடனடியாக நமது நாட்டில் தடைசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேப்போன்று கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசிற்கு கேஸ்பர்ஸ்கை வழங்கப்பட்டது. அதன்பின்னர் அக்டோபர் மாதம் அமெரிக்க அரசின் தகவல்கள் திருடப்பட்டதால் அதற்கு கேஸ்பர்ஸ்கை தான் காரணம் எனக் கூறியது. ஆனால் இதனை மறுத்த கேஸ்பர்ஸ்கை நிறுவனம் ரஷ்ய அரசிற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தது. மீண்டும் அதேபோல் மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கேஸ்பர்ஸ்கை நிறுவனம் இதற்கான பதிலை விரைவில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon