மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 14 நவ 2019

இந்தியப் பொருளாதார மதிப்பீடு குறைப்பு!

இந்தியப் பொருளாதார மதிப்பீடு குறைப்பு!

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை ஃபிட்ச் நிறுவனம் குறைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மதிப்பீட்டு ஆய்வு நிறுவனமான ஃபிட்ச், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 6.9 சதவிகிதத்திலிருந்து 6.7 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. அதேபோல, 2018-19 நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதத்தையும் 7.4 சதவிகிதத்திலிருந்து 7.3 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரமானது 5.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எட்டியிருந்த நிலையில், அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவிகிதமாக உயர்ந்தது. இதுபோன்ற நிலையில் ஃபிட்ச் நிறுவனம் தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளது.

சமீப காலமாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் அதிருப்தியளிப்பதாக இருப்பதாகவும், அதனால் தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளதாகவும் ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அடுத்த இரண்டு காலாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேம்படும் என ஃபிட்ச் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வங்கித் துறையின் மேம்பாட்டுக்காக மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.2.1 லட்சம் கோடி மூலதனத்தால் வங்கிகளின் கடன் வழங்கும் நடவடிக்கை சிறக்கும் எனவும் ஃபிட்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon