மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் ஆட்டோமேஷன்!

வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் ஆட்டோமேஷன்!

ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி மயத்தால் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புகளில் 5.7 கோடி வேலைவாய்ப்புகள் குறைந்துவிடும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

இதுகுறித்து மெக்கின்சே குளோபல் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’தானியங்கி மயம் மற்றும் ரோபோடிக்ஸ் போன்றவற்றால் உற்பத்தி அதிகரிப்பு, பணி நேரம் குறைவு, பணியிழப்பு போன்றவை சாதாரணமாக நடைபெறுகிறது. எதிர்காலத்தில் இந்தியா வேளாண் துறையிலிருந்து வெளியேறி, தொழில் மயமாக்கல் பாதையில் செல்வது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தானியங்கி மயமும் அதிகரிக்கும். எனவே 2030ஆம் ஆண்டுக்குள் 5.7 கோடி வேலைவாய்ப்புகளைத் தானியங்கி மயம் மற்றும் ரோபோடிக்ஸ் போன்றவை பறித்துவிடும்.

அதேபோல 2030ஆம் ஆண்டுக்குள் வேலை நடவடிக்கைகள் மற்றும் பணி நேரமும் தற்போதுள்ள நிலையிலிருந்து 9 சதவிகிதம் குறைந்துவிடும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தான் அதிகளவிலான தானியங்கி மயம் இருக்கும். வெப் டிசைனிங் துறையில் தானியங்கி மயம் அதிகரிக்காது. 2030ஆம் ஆண்டில் கட்டுமானத் துறையின் வளர்ச்சி 18 சதவிகிதம் உயரும்’ என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon