மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

பள்ளிகளுக்கு விடுமுறை!

பள்ளிகளுக்கு விடுமுறை!

ஒகி புயலால் கடும் சேதமடைந்த கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால் அங்குள்ள பள்ளிகளுக்கு மேலும் இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில் ஒகி புயல் உருவானது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் சேதத்தைச் சந்தித்தது. ஆயிரக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. வீடுகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அகற்றும் பணியில் பேரிடர் மீட்புகுழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்து அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் இன்றும் நாளையும் (டிசம்பர் 5, 6) இரண்டு நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon