மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

பதஞ்சலி உணவுப் பூங்கா விரிவாக்கம்!

பதஞ்சலி உணவுப் பூங்கா விரிவாக்கம்!

‘பதஞ்சலி நிறுவனத்துக்குச் சொந்தமாக நொய்டாவில் அமைக்கப்பட்டு வரும் மாபெரும் உணவுப் பூங்காவின் விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவுபெறும்’ என்று அதன் நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது அரசு உறைவிடத்தில் சந்தித்த பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவும், பதஞ்சலி நிறுவனத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் டிசம்பர் 3ஆம் தேதி சந்தித்தனர். அம்மாநிலத்தின் வேளாண் துறை, பசுப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் பதஞ்சலி நிறுவனம் தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அவர்கள் முதல்வருடனான கலந்துரையாடலில் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து பாபா ராம்தேவ் கூறுகையில், “உத்தரப்பிரதேச மாநில முதல்வரின் ஆலோசனைப்படி இம்மாநிலத்தின் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட பதஞ்சலி நிறுவனம் தயாராகவும், மிகவும் ஆர்வமாகவும் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றும் முனைப்பில் பதஞ்சலி நிறுவனம் இயங்கி வருகிறது” என்றார்.

நொய்டாவில் 430 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுவரும் இந்த மாபெரும் உணவுப் பூங்காவானது 2018ஆம் ஆண்டுக்குள் முழுமைபெறும் எனவும், அதில் 18,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் பாபா ராம்தேவ் உறுதியளித்தார். முன்னதாகப் பதஞ்சலி நிறுவனம் தெலங்கானா மாநிலத்தில் பெரிய உணவுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon