மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

காபி ஏற்றுமதி எட்டு சதவிகிதம் உயர்வு!

காபி ஏற்றுமதி எட்டு சதவிகிதம் உயர்வு!

நடப்பாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 8.08 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ஆசிய நாடுகளிலேயே காபி உற்பத்தியில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக உள்ள இந்தியா இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் காபியை ஏற்றுமதி செய்து வருகிறது. இன்ஸ்டண்ட் காபி தவிர்த்து, ராபஸ்டா மற்றும் அராபிகா வகை காபிகளையும் இந்தியா பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையில் இந்தியா மொத்தம் 3.61 லட்சம் டன் அளவிலான காபியை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதியான 3.34 லட்சம் டன் அளவிலான காபியை விட 8.08 சதவிகிதம் கூடுதலாகும். இவ்விவரங்கள் மத்திய காபி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாக நமக்குத் தெரிய வந்துள்ளது.

2016 ஜனவரி - நவம்பரில் 1,90,828 டன் அளவிலான ராபஸ்டா வகை காபி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் 10.80 சதவிகித உயர்வுடன் மொத்தம் 2,11,442 டன் அளவிலான ராபஸ்டா வகை காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டண்ட் வகை காபி ஏற்றுமதி 86 சதவிகிதம் உயர்வுடன் 22,966 டன்னிலிருந்து 44,084 டன்னாக அதிகரித்துள்ளது. அதேநேரம், அராபிகா வகை காபி ஏற்றுமதியானது 49,431 டன்னிலிருந்து 10.81 சதவிகிதம் சரிந்து 44,084 டன்னாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த காபி ஏற்றுமதியில், இத்தாலி நாட்டுக்கு 73,705 டன் காபியும், ஜெர்மனி நாட்டுக்கு 38,671 டன் காபியும், ரஷ்யாவுக்கு 26,319 டன் காபியும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon