மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 17 செப் 2019

ஜிகர்தண்டா ரீமேக்கில் தமன்னா

ஜிகர்தண்டா ரீமேக்கில் தமன்னா

ஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹாவுக்குச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது. இந்தப் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. அஜய் தேவ்கன் தயாரிக்க, நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். பாபி சிம்ஹா வேடத்தில் சஞ்சய் தத்தும், சித்தார்த் வேடத்தில் பர்கான் அக்தரும் நடிக்கின்றனர். இந்த நிலையில் லட்சுமி மேனன் நடித்த ரோலில் தமன்னா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

“ஏற்கனவே இந்தப் படத்தில் நடிக்க வைக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது இதில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்தான தகவலை விரைவில் அஜய் தேவ்கன் அறிவிப்பார்” என்று மிட்-டே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

இதன் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ளதாகவும், கங்கணாவின் குயின் ரீமேக்கில் தமன்னா நடித்து வருவதால் அந்தப் படத்தை முடித்துவிட்டு இதில் கலந்துகொள்வார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon