மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

வல்லுறவுக்குட்படுத்தினால் மரண தண்டனை!

வல்லுறவுக்குட்படுத்தினால் மரண தண்டனை!

மத்தியப்பிரதேசத்தில் 12 வயது அல்லது அதற்குக் கீழுள்ள சிறுமிகளைப் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தும் நபருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான மசோதா நேற்று (டிசம்பர் 4) சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, தற்போது மத்திய அரசு மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா 12 வயது அல்லது அதற்குக் கீழுள்ள சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தும் நபருக்குக் குறைந்தபட்சமாக 14 ஆண்டு சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க முன்மொழிகிறது. திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பெண்களைத் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்க இது வழிவகுக்கிறது.

“அப்பாவி இளம்பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மனிதர்களல்ல, அவர்கள் பேய். அவர்களுக்கு வாழவே உரிமை இல்லை” என முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 30ஆம் தேதி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கைக்குப் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 2016ஆம் ஆண்டில் அதிகளவில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக, 38,947 வழக்குகளில் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 4,882 வழக்குகள் பதிவாகியுள்ளன. நவம்பர் 3ஆம் தேதி பாலியல் பலாத்கார வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon