மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

பியூட்டி ப்ரியா - முடி உதிராமல் இருக்க!

பியூட்டி ப்ரியா - முடி உதிராமல் இருக்க!

காற்றில் முகத்தில் முடி வந்து விழுவதும், அதை நீக்கும் விரல்களும், அதைக் கவிபாடும் தருணமும் அழகோ அழகு. ஆனால், கூந்தல் உடைந்து போய் அடிக்கடி அது கண்களில்படுவதும் சற்றே வேதனைக்குரிய விஷயம்தான்.

முடியின் நுனிப்பகுதி அடிக்கடி சிலருக்குப் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலைமுடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவுபடுவது அதிகமாக நடக்கக்கூடிய விஷயம்.

உப்புத் தண்ணீரில் குளிப்பவர்களின் தலைமுடி அதிகமாக உடைந்து போக வாய்ப்பிருக்கிறது. மேலும், வயதான முடியும் அடிக்கடி உடைந்து போகும். கெமிக்கல் கலந்த ஷாம்பூவை உபயோகித்துத் தலைக்கு குளிப்பது அதிக முடி உதிர்வையும், பிளவையும் ஏற்படுத்தும்.

சோப்பு போன்றவற்றையும் தலைக்கு உபயோகிப்பது நல்லதல்ல. முடியின் நடுவில் உடைந்த முடியை மாதா மாதம் கட் செய்து ட்ரிம் பண்ணினால் சீக்கிரத்திலேயே சரியாகிவிடும். அதேபோல் அவரவர்களின் முடிக்கு தகுந்த கன்டிஷனர் உபயோகிப்பது நல்லது.

ஹேர் ட்ரையர், முடியை நேராக்கும் சாதனங்கள் போன்றவற்றை அடிக்கடி உபயோகிப்பதைத் தவிர்க்கவும். தலைமுடி ஈரமாக உள்ளபோது அதை இயற்கையான முறையில் காய வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து தலை குளிக்கலாம். ஷாம்பூ போட்டுக் குளித்தால், கூந்தலில் கன்டிஷனர் தடவி மேலிருந்து கீழ் நோக்கி தண்ணீர்விட்டு முடியை அலச வேண்டும். கூந்தலைத் தேய்த்துக் கழுவக் கூடாது. முடியின் வேர்க்காலில் கன்டிஷனர் படாமல் முடியில் மட்டும் அப்ளை செய்வது நல்லது.

அவ்வப்போது ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துதலும் சிறந்த நற்பலன்களைத் தரும்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon