மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

அரசு விளக்கமளிக்க வேண்டும்!

அரசு விளக்கமளிக்க வேண்டும்!

‘அரசு சரியான கணக்கெடுப்பு நடத்தாததே, காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாத காரணமாகும். எனவே, அரசு இதற்கு விளக்கமளிக்க வேண்டும்’ என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஒகி புயலால் குமரி மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (டிசம்பர் 4) கன்னியாகுமரி சென்ற விசிக தலைவர் திருமாவளவன், புயலால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே முழுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்று மீனவர்கள் கூறிவரும் நிலையில், எத்தனை மீனவர்கள் இறந்துள்ளனர், எத்தனை மீனவர்களைக் காணவில்லை என்ற முழு விவரத்தை அரசு வெளியிடவில்லை" என்ற திருமாவளவன், “குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

மேலும் அவர், “தமிழக அரசு மீனவர்கள் பற்றிய சரியான கணக்கெடுப்பு எடுக்காமல் இருந்ததுதான் மீனவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாததற்குக் காரணம். எனவே, தமிழக அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon