மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

தற்கொலை முயற்சிக்குக் காரணம் ப்ளூவேலா, காதல் தோல்வியா?

தற்கொலை முயற்சிக்குக் காரணம் ப்ளூவேலா, காதல் தோல்வியா?

நாக்கையும் கைகளின் நரம்பையும் பிளேடால் அறுத்துக்கொண்ட வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகன் 21 வயதான பிரசாந்த். இவர் பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் ஆண்டாள் நகரில் தனது அக்கா வீட்டில் தங்கி பிளம்பர் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் அவர் சாப்பிட்டுவிட்டு அறைக்கு உறங்கச் சென்றுள்ளார். அதன்பின், சிறிது நேரம் கழித்து அவர் அறைக்குச் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி மருத்துவர்கள், பிரசாந்த் நாக்கு, கைகளில் நரம்புகள் போன்றவற்றை பிளேடால் அறுத்துக்கொண்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ப்ளூவேல் விளையாட்டினால் பிரசாந்த் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரசாந்தின் மாமா கோபாலம் கூறுகையில், “பிரசாந்த் அடிக்கடி செல்போனில் பேசுவான். ஏதாவது கேட்டால் காதலியிடம் பேசுவதாகத் தெரிவிப்பான். அவன் காதலித்த பெண்ணுடன் ஏதோ பிரச்னை போன்று தெரிகிறது. போனில் தினமும் சண்டையிடுவான். இதனால் அவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ப்ளூவேல் விளையாடினால் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாக்கையும், கைகளின் நரம்பையும் பிளேடால் வாலிபர் அறுத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon