மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

அதிகரிக்கும் ஆப்பிள் இறக்குமதி!

அதிகரிக்கும் ஆப்பிள் இறக்குமதி!

‘வாஷிங்டனிலிருந்து ஆப்பிள் இறக்குமதி செய்யப்படுவது அதிகரிக்கும்’ என்று அதானி அக்ரி ஃபிரஷ் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் அமெரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஈரான், துருக்கி, ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது எங்களிடம் 26,000 டன் ஆப்பிள்களைக் காலநிலைக்கேற்ற வகையில் சேமித்து வைக்கும் கருவி உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களை 7 முதல் 8 மாதங்கள் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வோம்.

மொத்த விற்பனை 20 கிலோ பெட்டிகளிலும், சில்லறை விற்பனை 9 முதல் 12 கிலோ பெட்டிகளிலும், நுகர்வோர் விற்பனை 4 முதல் 6 ஆப்பிள்கள் என்ற எண்ணிக்கையிலும் விற்பனை செய்கிறோம். இந்தப் பருவத்தில் சிவப்பு நிற சுவைமிக்க ஆப்பிள்கள் மற்றவற்றை விட அதிகளவில் வந்துள்ளன. அடுத்ததாக இந்திய ராயல் ரக சுவைமிக்க ஆப்பிள்கள் அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளன. இவை வாஷிங்டன் ஆப்பிள்களை விட விலை குறைவாகவே உள்ளன. சில நாடுகள் இந்தியாவுக்கு ஆப்பிள் ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளன. இது வாஷிங்டன் ஆப்பிள்கள் இறக்குமதிக்கு வழிவகுக்கும். இந்தியாவில் ஆப்பிள் அறுவடை தற்போதுதான் தொடங்கியுள்ளது. இப்போது விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

சமீப காலமாக ஐரோப்பாவில் ஆப்பிள் உற்பத்தி குறைவாக இருந்ததால் அங்கிருந்து ஏற்றுமதியும் குறைவாகவே இருக்கிறது. தற்போது அங்கிருந்து ஆப்பிள் ஏற்றுமதி மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதேபோல சீனாவிலிருந்து ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதும் வாஷிங்டன் மற்றும் மற்ற நாடுகளில் இருந்து ஆப்பிள் இறக்குமதி அதிகரிக்க வழிவகுக்கும்" என்றார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon