மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

கிச்சன் கீர்த்தனா - பிரெட் பீட்சா செய்வது எப்படி?

கிச்சன் கீர்த்தனா - பிரெட் பீட்சா செய்வது எப்படி?

“எப்போ ஸ்கூல் விட்டு வந்தாலும் அதே பிரெட் தானா... வேற எதுவுமே இல்லையா” எனச் சலித்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு மாற்றாக கண்ணுக்குமுன் வந்து நிற்பது பீட்சா மட்டுமே.

தற்போது குறைந்த விலையிலும் கிடைத்துவிடுவதால் வரும்போதே குழந்தைகள் வாங்கிக்கொண்டு வந்து விடுகின்றனர். வீட்டிலிருப்பவர்களை எதிர்ப்பார்ப்பதில்லை.

அதேநேரத்தில் இல்லத்தரசிகள் விதவிதமாக ஆரோக்கிய சிற்றுண்டிகள் செய்து தர, அதை அனுதினமும் எதிர்பார்க்கின்றனர்.

“என்ன இருந்தாலும் பீட்சா போல் வருமா” என்பதே இறுதிக் கேள்வியாக இருக்கிறது.

வீட்டிலேயே பிரெட் பீட்சா செய்து அசத்துவோமா... வாருங்கள்!

தேவையானவை:

பிரெட் - ஒரு பாக்கெட் (10 ஸ்லைஸ்கள்), பீட்சா சாஸ் - ஐந்து தேக்கரண்டி, மொஜெரெல்லா சீஸ் - ஐந்து மேசைக்கரண்டி, கறுப்பு ஆலிவ் காய் – ஐந்து, டெமோட்டோ கெட்சப் - ஐந்து தேக்கரண்டி, பட்டர் - பத்து தேக்கரண்டி, வெங்காயம் - இரண்டு, குடமிளகாய் – ஒன்று, உப்பு – சிறிதளவு, பட்டர் + எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி.

செய்முறை:

1. வெங்காயம், குட மிளகாயைப் பொடியாக அரிந்து அதில் உப்பு தூவி பட்டர் + எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஊற்றி வதக்கி கொள்ள வேண்டும்.

2. எல்லா பிரெட்களிலும் பட்டரை லேசாகத் தடவி கருகாமல் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. முதலில் பத்து ஸ்லைஸ் பிரெட்டில் ஐந்து எடுத்து அதில் பிட்சா சாஸை பரவலாகத் தடவவும்.

4. அடுத்து வதக்கிய வெங்காய, குட மிளகாய் கலவை மற்றும் ஆலிவ் காயைப் பொடியாக நறுக்கி பிரெட்டில் கொள்ளும் அளவுக்குத் தூவவும்.

5. பிறகு மொஜெரெல்லா சீஸை தூவவும். கொஞ்சம் அதிகமாக தூவினால் ஒன்றோடொன்று கலந்து சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.

6. கடைசியாக டொமேட்டோ கெட்சப்பை தெளித்துவிட வேண்டும்.

7. எல்லா கலவையையும் வைத்திருக்கும் பிரெட்டின் மேல் வைத்து, மற்றொரு பொரித்த பிரெட்டை வைத்து அழுத்த வேண்டும்.

8. இதை மைக்ரோவேவில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும்

9. சுவையான பிரெட் பீட்சா ரெடி.

கீர்த்தனா சிந்தனைகள்:

சிப்பிக்குக் கடல் தரும் விளக்கம் முத்தாக இருக்கலாம்! நிலக்கரிக்குக் காலம் தரும் விளக்கம் வைரமாக இருக்கலாம்!

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon