மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

அமேசான் டிரான் பிரச்னைக்குத் தீர்வு!

அமேசான் டிரான் பிரச்னைக்குத் தீர்வு!

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்துவரும் அமேசான் புதிய முயற்சியாக டிரான்களைப் பயன்படுத்தி பயனர்களுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் வசதியை மேற்கொண்டு வருகிறது.

அமேசான் நிறுவனம் இதற்காக லண்டனில் நடத்திய சோதனையில் ஒரு பயனரிடம் வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளது. ஆனால், மக்களின் மனதில் இன்னும் டிரான் குறித்த அச்சம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. டிரான்கள் திடீரென நடுவானில் செயல்படாமல் போனால், அது கீழே உள்ள மக்களின் மீது விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தைப் பலரும் முன்வைத்துள்ளனர்.

இதற்குத் தீர்வு காணும் விதமாக அமேசான் நிறுவனம் புதிய வழிமுறை ஒன்றைக் கண்டறிந்துள்ளது. அதன்படி பறக்கும்போது டிரான்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதைக் கண்டறிந்து, அந்த டிரானை சிறு பகுதிகளாக பிரித்து கீழே விழும் வகையில் அதை வடிவைத்துள்ளனர். இதற்காக fragmentation sequence mode என்ற ஒரு வசதியை அமேசான் நிறுவனம் கண்டறிந்துள்ளது. வானில் பறந்து கொண்டிருக்கும்பொழுது டிரானில் உள்ள பேட்டரி பழுது படுதல் அல்லது குறிப்பிட்ட சில பாகங்கள் செயலிழந்து போதல் என ஏற்படும் தவறுகளைக் கண்டறிந்தாலோ அல்லது மோசமான வானிலையால் சரியான இலக்கினை டிரான் அடைய முடியாமல் பாதியில் பழுதுபட்டாலோ அந்த டிரான் fragmentation sequence mode-க்கு மாறிவிடும்.

இந்த வசதி இயக்கப்பட்ட உடன் அந்த டிரான் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் கீழே வீசப்படுகிறது. இதன் சோதனை ஓட்டத்தை விரைவில் செயல்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி புகைப்படங்களை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon