மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 14 நவ 2019

வீடுகளுக்குள் நீரூற்று ஆய்வுக்கு உத்தரவு!

வீடுகளுக்குள் நீரூற்று ஆய்வுக்கு உத்தரவு!

ஒகி புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்தது. கனமழையால் ஊட்டி அடுத்த கேத்தி அருகேயுள்ள அல்லஞ்சி, பாரதி நகர் மற்றும் மிட்டாய் நகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளில் இருந்து திடீரென ஊற்று நீர் உருவாகியுள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு வந்த பேரூராட்சி, வருவாய்த் துறையினர் ஊற்று நீர் பொங்கிவரும் அனைத்து இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து வெள்ளநீர் புகும் வகையில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு நோட்டீஸ் விநியோகம் செய்ததுடன், ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை செய்தனர்.

மேலும் இதுகுறித்து, ஊற்று நீர் வெளியேறிய சம்பவம் தொடர்பாக புவியியல் துறையினர் ஆய்வு செய்து, ஆய்வு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு வீடுகளில் நீரூற்று ஏற்பட்டுள்ளதால் வீடுகளை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon