மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

தமிழக வீரருக்குக் கிடைத்த வாய்ப்பு!

தமிழக வீரருக்குக் கிடைத்த வாய்ப்பு!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிவுற்ற பின்னர் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி-20 தொடர் நடைபெற உள்ளது.

இதற்கு முன்னரே ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இந்த தொடரிலிருந்து ஓய்வுக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 4) டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதால் தொடர்ந்து விளையாடி வந்த கேப்டன் விராட் கோலிக்கு டி-20 கிரிக்கெட் தொடரிலும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அறிவிக்கப்பட்ட அணியின் 18 வயதான ஆன தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அவருடன் கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாகப் பந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் தீபக் ஹூடா மற்றும் பாசில் தாம்பி இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, பும்ரா, மொகமது சிராஜ், பாசில் தாம்பி, மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி வருகிற 20ஆம் தேதி கட்டாக்கில் தொடங்குகிறது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon