மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஏப் 2020

க்ஷியோமி: புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5ஏ!

க்ஷியோமி: புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5ஏ!

சீனாவின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான க்ஷியோமி, ‘ரெட்மி நோட் 5ஏ’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் க்ஷியோமி நிறுவனம், இந்தியாவில் ரெட்மி நோட் 5ஏ என்ற விலை குறைவான புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. அறிமுகச் சலுகையாக முதல் 50 லட்சம் போன்கள் ரூ.4,999க்கு விற்பனைக்கு வருகிறது. இந்தச் சலுகை முடிந்த பிறகு இவை ரூ.5,999க்கு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

க்ஷியோமி நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரெட்மி நோட் 4 விற்பனையைத் தொடங்கி, இந்த ஆண்டில் அதிகமாக விற்பனையாகிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையைப் பெற்றது. ரூ.10,000 முதல் 20,000 வரையிலான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வெளியிடுவதே இந்த நிறுவனத்தின் வெற்றியின் ரகசியமாகக் கருதப்படுகிறது. குறைந்த விலையில் தரமான போன்களை வெளியிடும் யுக்தியே ஒப்போ, விவோ, ஹூவே, மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் போன்ற நிறுவனங்களிடமிருந்து இதைத் தனித்துவமாகக் காட்டுகிறது.

சமீபத்தில் ப்ளூம்பெர்க் ஊடகத்தில் வெளியான தகவலின்படி க்ஷியோமி நிறுவனம், கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் இந்தியாவில் சுமார் 3,250 கோடி வரை முதலீடு செய்துள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்திக்காக க்ஷியோமி, ஏற்கெனவே ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆலைகளை அமைத்துள்ளது. இனிவரும் ஆண்டுகளில் மேலும் பல கோடி ரூபாய்களை இந்தியச் சந்தையில் முதலீடு செய்து தனது வியாபாரத்தைப் பெருக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது க்ஷியோமி.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது