மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

தஞ்சை மேம்பாலத்தைத் திறக்க தடை!

தஞ்சை மேம்பாலத்தைத் திறக்க தடை!வெற்றிநடை போடும் தமிழகம்

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை நாளைத் திறக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை சாந்தபிள்ளை கேட் அருகே தஞ்சை - நாகை சாலையின் குறுக்கே ரயில்வே கிராசிங் உள்ளது. ரயில் செல்லும்போது அவ்வழியில் செல்வதில் சிரமம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. எனவே சுமார் ரூ.40 கோடி செலவில் 2013 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறை காரணமாகப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. பிறகு முதல்வர் நிதி ஒதுக்கீட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டது. வண்டிக்காரத்தெருவில் இருந்து மேரீஸ்கார்னர் வரை 870 மீட்டர் நீளம் பாலம் கட்டப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நாளை (நவம்பர் 29) திறக்கப்படவிருந்தது.

ஆனால் பாலம் திறக்கும் முன்பே சேதமடைந்திருப்பதாக கூறி நீல கண்டன் என்பவர்,சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தின் நடுவில் போடப்பட்டுள்ள தார்ச்சாலையில் நீண்ட தூரத்துக்கு இரண்டாகப் பிளவு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவரும் விரிசல் அடைந்துள்ளது. பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே நிலைமை இப்படி என்றால், கனரக வாகனங்கள், சென்றால் எத்தகைய விளைவு ஏற்படும். எனவே இப்பாலத்தைத் திறக்க தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (நவம்பர் 28) விசாரணைக்கு வந்த போது பாலத்தை திறக்க தடை விதித்து தலைமைச் செயலாளர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலை துறை ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும், புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டதற்கு தலைமைப் பொறியாளர் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 28 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon