மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

ஜியோ மொபைல் மீண்டும் விற்பனை!

ஜியோ மொபைல் மீண்டும் விற்பனை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி மொபைல் போன் விற்பனையை இரண்டாம் கட்டமாக மீண்டும் தொடங்கியுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவில், புதிய மொபைல்போன்களின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக தற்போது அனைத்து நிறுவனங்களின் பார்வையும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத 50 கோடி பேரின் மீதே உள்ளது. இந்நிலையில் 3ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மாற்றும் முயற்சியின் முதல் கட்டமாக ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி பீச்சர் போனை அறிமுகப்படுத்தி, இதுவரை 60 லட்சம் வரையிலான போன்களை விற்றுவிட்டது. இந்தச் சலுகை அறிவித்த இரண்டே நாட்களில் அதிக முன்பதிவின் காரணமாக ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று முன்பதிவு நிறுத்தப்பட்டது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, நவம்பர் 26 முதல் இந்தப் போன் மீது ஆர்வம் உள்ளவர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்பப்பட்டு, அருகிலுள்ள விற்பனை மையங்களில் போன்களைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி சலுகைக்குப் போட்டியாகச் சந்தையில் மற்ற நிறுவனங்களும் 4ஜி பீச்சர் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளன. அந்த வரிசையில் ஏர்டெல் நிறுவனம் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ரூ.2000க்கும் குறைவான மொபைல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. வோடஃபோன் நிறுவனம், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 மதிப்பிலான போனை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

செவ்வாய், 28 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon