மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

விசுவாசத்தின் விலாசம்!

 விசுவாசத்தின் விலாசம்!

விளம்பரம்

எம்.ஜி.ஆர். எண்ணிக்கையற்ற பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். அவரால் ஆயிரக்கணக்கானோர் மிக நேரடியாக பயன் பெற்றுள்ளனர். கோடிக்கணக்கானோர் மறைமுகமாக பயன்பெற்றுள்ளனர்.

இந்நிலையில்... தனக்கு யார் மூலமாக சில காரியங்கள் நிறைவேற்றிக் கொள்வது என்று எம்.ஜி.ஆர். ஆன்மா யோசித்தது. அந்த நல்ல காரியத்துக்கு சைதை துரைசாமியையே எம்.ஜி.ஆரின் ஆன்மா தேர்ந்தெடுத்தது என்றால் என்ன ஒரு கொடுப்பினை.

ஆம்... கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டை செப்பனிட்டு அதை புதுமைப்படுத்தி மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதில் மனித நேயர் சைதை துரைசாமி தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த நற்செயலுக்காக மலையாள ஊடகங்களும், தமிழ் ஊடகங்களும் மனித நேயரை நன்றியோடு பார்க்கின்றன.

அரசியல் உலகின் வரைமுறைகள் நெறிமுறைகள் எல்லாம் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்ற நிலையில்... தன்னை ஆளாக்கிய அரசியல் ஆசான் இறந்து முப்பது ஆண்டுகள் ஆனபின்னும் அவர் மீது அன்று காட்டிய மரியாதையையும் விசுவாசத்தையும் இன்றும் காட்டிவருகிறாரே என்பதுதான் ஊடகங்களின் ஆச்சரியக் குறி!

இதுகுறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பை இதோ பார்ப்போம்.

நாடகம், சினிமா என்று வாழ்க்கை முறை மாறியபோது கேரளாவில் சொந்த ஊரில் ஒரு வீட்டை எம்.ஜி.ஆர். விலைக்கு வாங்கினார். அதற்கு சத்திய விலாஸ் என்று பெயரிட்டார். அந்த வீடு கைமாறி, அங்கன்வாடியாக செயல்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தபோதிலும், அந்த வீடு சிதிலம் அடைந்தநிலையிலும் வீட்டை சீரமைக்க யாரும் முன்வராதது வேதனைக்குரியதாக மாறியது. இது செய்தியாக வெளியானபோது, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி, சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு எம்.ஜி.ஆர். இல்லத்தை தானே சீரமைக்க இருப்பதாக உறுதியளித்தார்.

இதுதொடர்பாக அப்போது அறிவிப்பு வெளியிட்ட சைதை துரைசாமி, ‘எம்.ஜி.ஆர். வாழ்ந்த 70 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டை எங்களது மனிதநேய இலவச கல்வி அறக்கட்டளை (மனிதநேய மையம்) சார்பில் சீரமைத்து புதுப்பித்து தருவதற்கு தயாராக இருக்கிறோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடிய சமயத்திலேயே, முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வெகுவிரைவில் சத்திய விலாஸ் வீட்டை புதுப்பித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கேரளா மாநிலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். அவருடன் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் நவநீதகிருஷ்ணன், கோவை பாண்டியன், முரளி ஆகியோர் சென்றனர். கேரளா வந்த சைதை துரைசாமியை, பஞ்சாயத்து தலைவர் பி.ஏ.ராஜீவ் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு சிதிலம் அடைந்த நிலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டை சைதை துரைசாமி பார்வையிட்டார். வீட்டை சீரமைப்பது குறித்து வடவனூர் கண்டகரை பஞ்சாயத்து நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்’’ என்பது ஊடக செய்தி.

மனித நேயர் அளித்த பேட்டியில்...

’’எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு அங்கன்வாடி மையமாக செயல்படுகிறது. வீட்டின் மேற்கூரை பழுதடைந்து அபாயநிலையில் உள்ளது. சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இவற்றை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வேன். எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா பெயரில் உள்ள கிணற்று நீரை குடிநீருக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் இந்த வீட்டை சுற்றியுள்ள 50 சென்ட் நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி பயிரிட வழிவகை செய்வேன்.

எம்.ஜி.ஆர். வீட்டை பார்க்க வருபவர்களுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் அறிந்துகொள்ளும்படியான ஒரு நினைவகத்தை அமைப்பேன். எம்.ஜி.ஆர். சிலையை நிறுவ வடவனூர் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தீர்மானிப்பேன். இந்த வீடு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் குடும்பத்தினர் பெயரில் இருக்கிறது. அவர்கள் எனது முயற்சிக்கு முழு ஆதரவும், ஒப்புதலும் அளித்துள்ளனர்’’ என்கிறார் மனித நேயர்

விசுவாசத்தின் விலாசம் என்றால் அது மனித நேயர்தான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் என்ன வேண்டும்?

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon