மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: விளம்பரமே வேண்டாம்பா!

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: விளம்பரமே வேண்டாம்பா!

விளம்பரம்

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’வின் பாரம்பரியம் உணவக ஹாலை விட்டு வெளியே வந்த என் மகன்... “அடுத்து எங்கப்பா போகணும்?” என்றான்.

அவசரமாகப் பதில் சொன்னார் என் சம்பந்தி, “இதுவரை நாம பார்த்த ‘ஶ்ரீ தக்‌ஷா’ விருத்தா வில்லாக்கள், அப்பார்ட்மென்ட்ஸ்... அடுத்ததாகப் பார்த்த சன்ஸ்ரே பேஸ் டூ அப்பார்ட்மென்ட்ஸ் அதன் செளகர்யங்கள், இப்ப கடைசியா பார்த்துட்டு வந்த ஆஷ்ரிதா வில்லாக்கள், ஃப்ளாட்ஸ், அங்கே எனக்கேற்பட்ட அனுபவங்கள் எல்லாம் மனசு பூரா நிறைஞ்சிருக்கு. இதிலே எந்த மாதிரியான வீட்டை வாங்குவது என்பதில் எனக்கேற்பட்டுள்ள பிரச்னையே பூதாகரமா மனசுக்குள்ளே வியாபிச்சிருக்கு. என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. நான் கொஞ்சம் யோசிக்கணும்” என்றார்.

அவர் பேச்சைக் கேட்ட ஶ்ரீ தக்‌ஷா நிர்வாகி, “சார் இப்ப நாம எங்கேயும் போகலை. ஹோட்டலுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க” என்றார்.

“எனக்கு உங்க எம்.டி-யைப் பார்க்கணுமே” என்று அவரிடம் என் சம்பந்தி கேட்க...

“நீங்க எப்ப வேணுமானாலும் பார்க்கலாம். இப்போதைக்கு நீங்க ஹோட்டல் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க. நானே உங்களைக் கூப்பிடறேன்” என்றார்.

உண்ட மயக்கம் தொண்டை வரைக்குமா, தொண்டனுக்குமா என்கிற வார்த்தை ஆராய்ச்சிகளுக்கெல்லாம் இடம்கொடுக்காமல் சாப்பிட்டதும் வரும் தூக்கம் அவரை அரவணைத்துக்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.

காரில் ஏறி அதே வடவள்ளி பகுதியில் இருந்த ஹோட்டலுக்குப் புறப்பட்டோம். காரின் பின் சீட்டில் இருந்த என் சம்பந்தியிடம் பேச முயன்றேன். அவர் அரை தூக்கத்தில் இருந்தார். கோவைக்கு வந்து தனக்கான வீட்டை ஶ்ரீ தக்‌ஷா வில் பார்த்துவிட்ட திருப்தி அவர் முகத்தில் பிரதிபலித்தது.

ஹோட்டலுக்குச் சென்று அறைக்குச் செல்ல லிஃப்டில் ஏறுவதற்காக நின்றபோது என் மகன் சொன்னான். “ஒரு விஷயத்தைக் கவனிச்சீங்களாப்பா. நாம வாங்கப் போகிற வீட்டுக்காக வழக்கமா வீட்டை விக்கப்போறவங்களோ அல்லது வீட்டை விற்று தருகிற புரோக்கர்ஸோதான் நம்மளோடவே வந்து வீட்டைப் பத்தியும் அந்த ஏரியாவைப் பத்தியும் விலாவாரியா சொல்வாங்க. அப்படிப்பட்டவங்க யாருமே நம்மளோட வரலை. நமக்கு வழிகாட்டியா ஆங்காங்கே இருந்த ஶ்ரீ தக்‌ஷா வோட ஆட்கள்கூட அது இங்கே இருக்கு, இது இங்கே இருக்குன்னு சொன்னாங்களே தவிர எதை பற்றியும் நம்மிடம் பெருமைப்படுத்தியே சொல்லலை. நாம இத்தனை நேரம் பார்த்து பேசினவங்க எல்லாரும் அந்தந்த இடங்களில் வசிக்கிறவங்கதான். அவங்க அத்தனை பேரும் இதுநாள் வரை அங்கு வசித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். அவ்வளவுதான்.”

“ஆமாம்...”

“இதிலேர்ந்து ஒரு விஷயம் தெளிவா எனக்குப் புரிஞ்சுடுச்சுப்பா.”

“என்ன சொல்ல வர்றே நீ?”

“‘ஶ்ரீ தக்‌ஷா’ பில்டர்ஸுக்கு விளம்பரமே வேண்டாம்பா. அங்கே வசிக்கிறவங்களே அதன் கட்டுமானத்தைப் பற்றியும், வசதிகள் பற்றியும், தாங்கள் செளகர்யமா வாழுகிறதைப் பத்தியும் தங்களைச் சார்ந்தவர்களுக்குச் சொல்லி புரமோட் பண்ணிட்டு வர்றாங்க.”

“ஆமாம்பா... அதனாலதான் எந்த இடத்திலே தங்கள் கட்டுமான பணியை ஆரம்பிச்சாலும் உடனே எல்லா இடங்களும் வித்து தீர்ந்துடுதுன்னு நினைக்கிறேன்.”

“நான் சொல்ல வந்ததும் அதையேதாம்பா” என்றான்.

“இதை நான் எப்பவோ புரிஞ்சுக்கிட்டேன்” என்றார் சம்பந்தி.

பேசிக்கொண்டே லிஃப்ட்டில் சென்று அறையை அடைந்தோம்.

அறைக்குள் நுழைந்ததும் எனக்கும் சற்று ஓய்வு தேவைப்பட்டது. அது, எனக்கான வேலை முடிந்துவிட்டதால் வந்த திருப்தியான ஓய்வு. சம்பந்தி கேட்டதுபோல் ‘ஶ்ரீ தக்‌ஷா’ எம்.டியைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு எனக்கும் இருந்தது.

படுக்கையில் விழுந்ததும் என்னையும் உறக்கம் ஆட்கொண்டது. தூங்கிவிட்டேன்.

மாலை நான்கு மணிக்கு இன்டர்காமில் பேசும் என் சம்பந்தியின் குரல் கேட்டு எழுந்தேன்.

“எங்களுக்கு வேற எந்த புரோகிராமுமில்லை. நாங்க வந்த விஷயமே... கோவையில் செட்டில் ஆக ஒரு நல்ல ஃப்ளாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதுவரை பார்த்த ஶ்ரீ தக்‌ஷா இடங்கள் அத்தனையும் அருமை. நான் சொன்ன மாதிரி உங்க எம்.டி-யைப் பார்த்துப்பேச வேண்டியது மட்டும்தான் பாக்கி” என்று பேசிக்கொண்டிருந்தார் என் சம்பந்தி.

இடையில்... சில முறை “சரி... சரி” என்றார். கடைசியாக “அப்படியே செய்துடறோம்” என்றார்.

மெல்ல எழுந்து உட்கார்ந்த நான், “என்ன சம்பந்தி? யார் பேசினாங்க? என்ன விஷயம்?” என்றேன்.

“இதுவும் நல்ல விஷயம்தான். நாம இதுவரை பார்த்த ‘ஶ்ரீ தக்‌ஷா’வோட இடங்கள் ரொம்ப குறைச்சலாம். ‘இன்னும் சில இடங்கள் இருக்கு பார்த்துட்டு வந்து எங்க எம்.டியோட பேசுங்களேன்’னு ஶ்ரீ தக்‌ஷா ஆபீஸிலேர்ந்து பேசினாங்க. ‘ஶ்ரீ தக்‌ஷா’ இடங்கள் இன்னும் இருக்கா என்கிற ஆச்சர்யம் ஒருபக்கம்; அதையும்தான் பார்த்துடுவோமேன்னு ஆர்வம் இன்னொரு பக்கம். ரூம்லே இருந்து என்ன செய்யப் போறோம்னு சரின்னு சொல்லிட்டேன். என்ன நான் சொன்னது சரிதானே?” என்றார்.

“சரிதான் சம்பந்தி” என்றேன். எனக்கும் அந்த ஆர்வமிருந்தது. புறப்பட்டேன்.

பயணம் தொடரும்...

விளம்பர பகுதி

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon