மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

நான் சுய சிந்தனை உடையவள்!

நான் சுய சிந்தனை உடையவள்!

`நான் எப்பொழுதும் சுதந்திரமாக சுய சிந்தனையுடன் சிந்திக்கக்கூடியவள்’ என்று தெரிவித்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

`ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியுடன் இணைந்து `டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்திவரும் நிவேதா அந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

“தெலுங்கில் மென்டல்மதிலோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளேன். விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தில் சுதந்திரமான சுய சிந்தனை கொண்ட ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன். உண்மையில் நானும் அப்படி ஒரு சிந்தனை கொண்ட பெண்தான்” என்று கூறியுள்ளார்.

தமிழ் பேசத் தெரிந்த பெண்ணாக இருந்தாலும் இன்னும் அவருக்கு இன்னொருவர்தான் டப்பிங் பேசுகிறார். அது குறித்துப் பேசிய அவர், “என் அம்மா ஆந்திராவைச் சேர்ந்தவர். என் அப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். எனக்கு தமிழ் நன்றாகப் புரியும். ஆனால் சரளமாகப் பேசத் தெரியாது. அதனால் எனக்காக டப்பிங் பேசுவதற்கு ஆள் தேவைப்படுகிறது. இருந்தாலும் என் நடிப்பிற்கு மற்றவர் குரல் கொடுப்பதை நான் விரும்பவில்லை. அதனால் எதிர்காலத்தில் முடிந்தவரை நானே டப்பிங் செய்வேன்” என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மென்டல்மதிலோ’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் நாளை (நவம்பர் 24) வெளியாக இருக்கிறது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon