மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

பணியிடை நீக்கம்: நீதிபதி தற்கொலை!

பணியிடை நீக்கம்: நீதிபதி தற்கொலை!

திருப்பதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான நீதிபதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தைச் சேர்ந்த சதானந்தமூர்த்தி (48) திருப்பதி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிவந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பதி கோயிலுக்குச் சென்றிருந்தபோது அங்கு அர்ச்சகர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தனது பதவியைத் தவறாக பயன்படுத்தியதாக கூறி அவரைப் பணியிடை நீக்கம் செய்து ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சில மாதங்களாகவே வீட்டை விட்டு அவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (நவம்பர் 22) குளித்துவிட்டு வருவதாகக் கூறி தனது அறைக்குச் சென்ற நீதிபதி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம்பக்கதினரிடம் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் அவர் மின் விசிறியில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுபற்றி அவரின் குடும்பத்தினர் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். தனது பதவிக்கு அவமதிப்பு ஏற்பட்டதாகக் கருதினார் என்று நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.

.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon