மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

வெங்காயம்: உற்பத்தி குறைவால் விலை உயர்வு!

வெங்காயம்: உற்பத்தி குறைவால் விலை உயர்வு!

உற்பத்திக் குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வெங்காயம் அதிகளவில் விற்பனை செய்யப்படும் மொத்த விற்பனைச் சந்தையான மகாராஷ்டிரா மாநிலத்தின் லாசல்கான் பகுதியில் 25 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. காரிஃப் பருவத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான உற்பத்தி குறைந்துள்ளதே இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.170 வரையில் விற்பனையாகிறது.

இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான வெங்காய ஏற்றுமதி 12.3 லட்சம் டன்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 56 சதவிகிதம் அதிகமாகும் என வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விளையும் வெங்காயத்தில் பெருமளவு சீனா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி.ரங்கராஜன் கூறுகையில், "இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதம் 3.59 சதவிகிதம் உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை, குறிப்பாக வெங்காயத்தின் விலை உயர்வடைந்திருந்தது. இந்தப் பணவீக்கம் டிசம்பர் மாதம் இறுதியில் சீராகி விலை கட்டுக்குள் வரும்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon