மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

`வி’ சென்டிமெண்டில் அஜித் படம்!

`வி’ சென்டிமெண்டில் அஜித் படம்!

அஜித், சிவா நான்காவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு `விஸ்வாசம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அஜித், சிவா முதன்முறையாக இணைந்த திரைப்படம் `வீரம்’. இந்தப் படத்தை அடுத்து `v' எழுத்தில் தொடங்குமாறே இந்த கூட்டணியின் மற்ற படைப்புகளான வேதாளம், விவேகம் போன்ற படங்கள் அமைந்தன. தற்போது அதே `v' வரிசை சென்டிமெண்டில் `விஸ்வாசம்’ என்னும் பெயரில் படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை அஜித்தின் மேனஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பின்னர், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மற்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. “அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரிவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். சிவா இயக்கும் இந்தப் படத்துக்கு 'விஸ்வாசம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 2018 தீபாவளி வெளியீடாக `விஸ்வாசம்’ வெளிவரவுள்ளது. இதன் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon