மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ஸ்கைப்புக்குத் தடை விதித்த சீனா!

ஸ்கைப்புக்குத் தடை விதித்த சீனா!

வீடியோ கால் முறையில் தங்கள் நண்பர்களுடன் மிகவும் எளிதாகத் தொடர்புகொண்டு பேசுவதற்கு உதவியாக இருக்கும் ஸ்கைப் அப்ளிகேஷனை சீனா தடை செய்துள்ளது.

2003ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கைப் அப்ளிகேஷன் உலகின் பல்வேறு பயனர்களைக் கவர்ந்துள்ளது. வீடியோ காலிங் தொழில்நுட்பத்திற்கு மிகவும் உதவியாக உள்ள இந்த அப்ளிகேஷன் சீனாவின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்ததால் தற்போது ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அதை நீக்கம் செய்துள்ளது. நேற்று (நவம்பர் 22) ஸ்கைப் அப்ளிகேஷன் சீனாவில் ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து ஸ்கைப் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட தகவலில் இது தற்காலிகமாகத்தான் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் அந்த அப்ளிகேஷனில் உள்ள குறைகள் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் அவை சீனாவில் வெளியாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கூகுள் நிறுவனத்தின் duo அப்ளிகேஷன் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், ஸ்கைப் தடைசெய்யப்பட்டுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பின்னடைவிற்கு வழிவகுக்கும். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விரைந்து செயல்பட்டு, மீண்டும் ஸ்கைப் அப்ளிகேஷனை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon