மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

சிறுநீரகம் மாற்றப்பட்ட குழந்தை!

சிறுநீரகம் மாற்றப்பட்ட குழந்தை!

தந்தை கைது செய்யப்பட்டதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தடை செய்யப்பட்ட குழந்தைக்கு, இன்னொரு சிறுநீரகம் கிடைத்ததில் அக்குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.

டிக்கர்சன், கார்மெல்லா பர்கெஸ் தம்பதியினர் அட்லாண்டாவைச் சேர்த்தவர்கள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஏ.ஜே. பர்கெஸ் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தை பிறந்தது முதலே அதன் சிறுநீரகங்கள் செயல்படாமல் இருந்தன. குழந்தையைக் காப்பாற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி என்று. மருத்துவர்கள் கூறினர்.

குழந்தைக்குத் தேவையான சிறுநீரகத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, குழந்தையின் தந்தையின் சிறுநீரகம் பொருந்தும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், குழந்தையின் தந்தை டிக்கர்சன், பயணத்தின்போது ஆயுதங்கள் எடுத்துச் சென்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்உறுப்பு தானம் செய்வோருக்கு எந்த விதக் குற்ற பின்னணியும் இருக்கக் கூடாது எனச் சட்டம் இருப்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைக்குச் சிறுநீரகம் மாற்றப்படவில்லை எனில் குழந்தை இறந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, குழந்தையின் தந்தை அறுவை சிகிச்சை அன்று பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் 90 நாள் பரோலில் இருக்க வேண்டும் என்றும், தொடர்ந்து 90 நாட்கள் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனது உடல் நிலை குறித்துக் கவலை இல்லை, அறுவை சிகிச்சை நடந்தால் போதும் என அவர் தெரிவித்தார். ஆனால் அதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து பெற்றோருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மரணமடைந்த ஒருவரின் சிறுநீரகம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, நேற்று (நவம்பர்ம 22) அதிகாலை 7 மணி அளவில் பரிசோதனை முடித்து உடனடியாகச் சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

இறந்தவரின் உடலிலிருந்த சிறுநீரகம் சிறுவனுக்குப் பொருத்தப்பட்டதால் சிறுநீரகம் வேலை செய்ய ஆரம்பித்து சிறுநீர் வெளிவரத் தாமதமாகும் என மருத்துவர்கள் எதிர்பார்த்தார்கள். எனினும், சிறுவனின் உடலிலிருந்து விரைவிலேயே சிறுநீர் வெளியேறியது. இதனால் பெற்றோரும், மருத்துவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon