மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

நேரடி விற்பனையில் புதிய விதிமுறைகள்!

நேரடி விற்பனையில் புதிய விதிமுறைகள்!

நேரடி விற்பனைக்கான மாதிரி விதிமுறைகளை ஏற்பதற்கு சிக்கிம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்துவதற்கு ஆலோசித்துவருவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரான சி.ஆர்.சவுதரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ரூ.7,770 கோடி மதிப்பிலான இந்தியாவின் நேரடி விற்பனைச் சந்தையின் மதிப்பு 2025ஆம் ஆண்டுக்குள் ரூ.45,000 கோடியாக உயரும் என்று வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் மதிப்பிட்டுள்ளது. அதை நோக்கிய நடவடிக்கையாக நேரடி விற்பனைத் துறையைச் சீர்ப்படுத்தப் புதிய சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்பட்டுவருகின்றன. மேலும், இத்துறையானது அதிகப் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் திறனைக் கொண்டுள்ளதால் இத்துறையில் அரசு தனது கவனத்தை அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தப் பல்வேறு திட்டங்கள் இருக்கும் நிலையில் சந்தைப்படுத்துதலை மேம்படுத்தச் சிறப்பான திட்டங்கள் எதுவும் இல்லை.

இது பற்றி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரான சி.ஆர்.சவுதரி கூறுகையில், “நேரடி விற்பனைப் பிரிவில் நாம் மிகவும் மந்தமாக இருக்கிறோம். இதைத் துரிதப்படுத்த வேண்டும். அதற்காகப் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை நேரடி விற்பனையை மேம்படுத்துவதாகவும், விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்துவதாகவும், பணப்புழக்கத்தைச் சீராக்குவதாகவும் இருக்கும். இதில் அதிகக் கவனம் செலுத்தவுள்ளோம். எந்தவொரு தொழிலிலும் உற்பத்தி மட்டுமல்லாமல் சந்தைப்படுத்துதலும் சிறப்பாக இருந்தால்தான் அத்தொழில் மேம்படும். தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த அரசு தரப்பிலிருந்து ’ஸ்டார்ட் அப் இந்தியா’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. நேரடி விற்பனைக்கான புதிய விதிமுறைகளை சிக்கிம், சத்தீஸ்கர் மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதற்கான ஆலோசனையில் உள்ளன” என்றார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon