மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

காலிறுதியில் பி.வி.சிந்து

காலிறுதியில் பி.வி.சிந்து

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஹாங்காங் சூப்பர் சீரீஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

கெவ்லோன் நகரில் நடைபெற்றுவரும் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இன்று (நவம்பர் 23) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியிடம் மோதினார்.

தொடக்கம் முதலே சிந்து சிறப்பாக விளையாடி முதல் செட்டில் 21- 14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் எளிதில் தோற்றாலும் இரண்டாவது செட்டில் மிகவும் சிறப்பாக விளையாடி சிந்துவிற்குக் கடும் போட்டியாக அயா ஒஹோரி விளையாடினார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த இரண்டாவது செட்டினையும் 21- 17 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி, சிந்து வெற்றிபெற்றார்.

நாளை (நவம்பர் 24) நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேன் எமகூச்சி உடன் மோத உள்ளார். இன்றிரவு நடைபெறவிருக்கும் மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சீனா வீராங்கனை யூசி சென்னிடம் மோத உள்ளார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் காலிறுதிப் போட்டிக்கு சாய்னா தகுதி பெறுவார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon