மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

சபரிமலையில் சிறப்பு தரிசனம் ரத்து!

சபரிமலையில் சிறப்பு தரிசனம் ரத்து!

சபரிமலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 1000 ரூபாய் சிறப்பு தரிசனத் திட்டத்தைத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று (நவம்பர் 22) ரத்து செய்தது.

மண்டல பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சபரிமலையில் குவிந்துவருகின்றனர்.

அவர்களின் வசதிக்காக மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த அன்னதானம் நன்கொடை மூலம் கிடைக்கும் பணத்தில் நடக்கிறது. அன்னதானத் திட்டத்திற்கு வரும் நன்கொடை 2016ஆம் ஆண்டு குறைந்தது. எனவே, அன்னதானத் திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க சிறப்பு தரிசனம் செய்வதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அன்னதானத் திட்டத்துக்கு 1000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் நிதி அளிப்பவர்களுக்கு, சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும்,பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதைக் காண்பித்து சிறப்பு வரிசை வழியாகப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தான உறுப்பினர் ராகவன் 18ஆம் தேதி அறிவித்தார். மற்ற பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சிறப்பு தரிசனம் அமையும் எனத் தெரிவித்தார்.

ஆனால் சிறப்பு தரிசனத்திற்கு வருபவர்களால் மற்ற பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. எனவே, சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதாக நேற்று தேவசம் போர்டு அறிவித்தது. இதனால் இனி விஜபிக்களும் பக்தர்களோடு வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon