மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

பிளஸ் 1 தனித் தேர்வர்களுக்கு அக மதிப்பீடு இல்லை!

பிளஸ் 1 தனித் தேர்வர்களுக்கு அக மதிப்பீடு இல்லை!

தமிழகத்தில் பிளஸ் 1 எழுதும் தனித் தேர்வர்களுக்கு அக மதிப்பீடு முறை கிடையாது என பள்ளிக் கல்வித் துறை இன்று (நவம்பர் 23) அறிவித்துள்ளது.

2017-2018 கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மே 17ஆம் தேதி அறிவித்திருந்தார். பொதுத் தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வு நேரம் 3 மணிநேரத்திலிருந்து, 2.30 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மதிப்பெண் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. மொத்த மதிப்பெண் 200இலிருந்து 100ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் 10% மதிப்பெண்கள் அக மதிபீடாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்கும் முறை பள்ளியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, நேரடித் தேர்வெழுதும் தனித் தேர்வர்களுக்கு அக மதிப்பீட்டு முறையினை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள் மற்றவர்களைப் போலவே 90 மதிப்பெண்களுக்கு எழுதினால் போதும். எழுத்துத் தேர்வில் 90க்கு வாங்கும் மதிப்பெண்கள் விகிதாச்சாரப்படி 100க்கான மதிப்பெண்களாகக் கணக்கிட்டு வழங்கப்படும். மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி அடையாத தனித் தேர்வர்கள் அனைத்துப் பாடங்களிலும் எழுத்துத் தேர்வில்100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் குழப்பத்தைப் போக்கும் வகையில் பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon