மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

இலை இருக்கு கட்சி எங்கே? :அப்டேட்குமாரு

இலை இருக்கு கட்சி எங்கே? :அப்டேட்குமாரு

இலை இந்தா இருக்கு, கட்சி யாருகிட்ட இருக்குன்னு ரத்தத்தின் ரத்தங்கள் மண்டையை குழப்பிகிட்டு இருக்காங்க. இது இருக்கட்டும். இந்த பக்கம் கவனிச்சீங்களா? அரசியல்ல அசாதாரண சூழல் நிலவுது, வெற்றிடத்தை நிரப்ப சூப்பர் ஸ்டார் தான் சரியான ஆளுன்னு என்னவெல்லாம் முட்டுகொடுத்துட்டு இருந்தாங்க. அவங்களை எல்லாம் இப்ப ஆளையே காணோமே. ரஜினி வந்து போரை நடத்தி சிஸ்டத்தை சரி பண்ணிருவாருன்னு சொன்ன அங்கிள்ஸ்லாம் இப்ப தலையில துண்டை போட்டு வயித்து பாட்டை பார்க்க ஆரம்பிச்சுருப்பாங்க. 2.0-க்கு வந்த புரொமோஷன் போதும்னு நினைச்சுருப்பாங்களோ. அவர் மனசுக்குள்ளையும் ஒரு ஓரத்துல முதல்வர் ஆனா எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்துருப்பாரு. அதுக்குள்ள கமல் வண்டியை பத்திட்டாரா அதனால தான் பேக் வாங்கிட்டாருன்னு நம்ம ஆளுங்க பேசிக்குறாங்க. இன்னைக்கு நிலைமையில் அரசியலை விட ஆன்மீகம் தான் பவர் செண்டர்னு நினைச்சுருக்கலாம். கூடிய சீக்கிரம் ஒரு மடம் ஆரம்பிச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. ஒருவேளை அப்படி நடந்தா ரசிக கண்மணிகள் அதுக்கு என்ன மாதிரி முட்டு கொடுப்பாங்கன்னு தியானத்துல உட்கார்ந்து யோசிச்சுகிட்டு இருக்கேன். நீங்க சத்தம் வராம அப்டேட்டை படிச்சுட்டு கிளம்புங்க.

@Arun Pandiyan

வர வர கமலு தமிழு டிஸ்கோ டான்ஸ் ஆடுது....

பொறுமையா டைப் பண்ணுங்க விருமாண்டி... நாங்க எங்கயும் போயிட மாட்டோம்

@Karunanidhi RV

திரைப்படத் துறையிலிருந்து அடுத்த முதல்வராக நடிகர் கமல், அஜித் வந்தால் நன்றாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன்

ஆமா தெருத் தெருவா போராடி மக்கள் பிரச்சினைகள பேசி ஜெயிலுக்கு போய் லோல் படுறவன் எல்லாம் உங்க வாய பாத்துகிட்டு உக்காந்துருப்பானுங்க . நீங்க நோகு படாம வந்து உக்காந்துக்கங்க.

@கவி தமிழ்

தாமரை நிழலில் இரட்டை இலை.

அதிக நிழல் ஆபத்து.

இலை அழுகி உதிரும் காலம் விரைவில்.

@சிலம்பரசன் செல்வராசு

அதிமுக கட்சி, கொடி அனைத்தும் இனி எடப்பாடி அணிக்கே- தேர்தல் ஆணையம்

அப்பாடா நான் பயந்தே போயிட்டேன்.. தினகரனுக்கு குடுக்காம எடப்பாடிக்கு கொடுத்திட்டானுவ... இனி கட்சிய இவனுவளே அழிச்சிடுவானுவ...

நா. பிரபாகரன்

குடிசைகள் எரிவதும் அகற்றப்படுவதும் பட்டினி கிடக்க வைப்பதும், கல்வி மறுக்கப்படுவதும் பட்டியலினத்தின் மேல் நடத்தப்படும் போர்

@சிலம்பரசன் செல்வராசு

நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு : உறுதி செய்தது வருமான வரித்துறை

இதென்னடா அஞ்சிரூவா டாக்டருக்கு வந்த சோதனை?

@Arockiaraj Devasahayam

கடனில் சிக்குவதில் விவசாயிகளும் சினிமா தயாரிப்பாளர்களும் ஒன்று..

இரண்டிலும் லாபமோ, நட்டமோ தொழிலாளிகளும், இடைத்தரகர்களும் அவர்களுக்கான வருமானத்துடன் தப்பிவிடுகிறார்கள்...

@itzjanu

போதிக்கும் போது கற்றுக் கொள்ளாத பாடத்தை

பாதிக்கும்போது கற்றுக்கொள்கிறோம் நாம்.

@Boopathy Murugesh

அன்புசெழியன் போல சிலர் தான் வெளி உலகிற்கு தெரிகிறார்கள்.. சொக்கலிங்கம் போல பலர் வெளி உலகிற்கு தெரியாமலே வட்டி வசூல் செய்கிறார்கள். அவர்களை அரசு கைது செய்ய வேண்டும்..

- அது யாருங்க சொக்கலிங்கம்?

அவன் எனக்கு கடன் குடுத்தவன்.. லைக்க மட்டும் போடு..

@aselviku

தாலிக்குத் தங்கம் உட்பட பல்வேறு திட்டங்களை தந்து, நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயலலிதா. -Ops

// தாலிக்கு தங்கம் குடுத்துட்டு.. டாஸ்மாக் மூலமாக பல லட்சம் தாலிய அறுத்தவங்க தானே உங்கம்மா..?

@withkaran

டைட்டில நல்லா வச்சா அதிக எதிர்பார்ப்பாட வந்து படம் ப்ளாப் ஆகிடுதுங்கிறதுக்காக மொக்கையா டைட்டில் வச்சு படத்த ப்ளாக்பஸ்டராக்க ப்ளான் பண்றான்டா என் தலைவன் சிவா..

@Mahaprabhu_M

OPS: இரட்டை இலைய

நம்மளுக்கு குடுத்துடாங்க

அத என்ன பன்னலாம்ணே?

EPS: சரிபாதியா.. ஆளுக்கொரு

இலைய பிச்சுக்குவோம்.!

@கருப்பு கருணா

"நித்தி பாலியல் வீடியோ உண்மையானது"

- தடயவியல் துறை

அட விஞ்ஞானிகளே...இதை கண்டுபுடிக்கவா இத்தனை வருசமாச்சி....

எத்தனை அறம் படம் வந்தால்கூட ஒங்கள திருத்தவே முடியாதுய்யா!

@Kozhiyaar

எனக்கு மிகவும் பிடித்த வெண்டைக்காய் வருவலை குறைவாகவும், பிடிக்காத கீரைக்கூட்டை அதிகமாகவும் கொடுத்து வாழ்க்கை தத்துவத்தை உணர்த்து முயல்கிறார் என் வீட்டம்மா!!!

@chandra_kalaS

ஜெயலலிதா ஆசியால் இரட்டை இலை கிடைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி

மோடிஜியின் ஆசியால்னு சொல்லுங்க.!!

@Boopathy Murugesh

அரசியல் களத்தில் குதிக்க இப்போது அவசரம் இல்லை - ரஜினி

அதானேடா.. பெரியவனுக்கு என்ன வயசாயிருச்சுன்னு கல்யாணத்துக்கு இப்ப அவசரம்?

@naatupurathan

இரட்டை இலை மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி - ஈபீஸ் & ஓபீஸ்!

இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன...!!!

@abuthahir707

இப்போதெல்லாம் ஆபீஸ் மீட்டிங் கூட வாட்ஸப்ல தான் நடக்கின்றது

@HAJAMYDEENNKS

கட்சியை அடமானம் வைத்து சின்னத்தை கடனாக பெற்றிருக்கிறார்கள்...!

@Kozhiyaar

சிலிண்டர்க்கான மானியத்தை குறைந்தபட்சம் பணம் இல்லை என்று வங்கி எடுத்துக் கொள்கிறது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் ஒரு பெரியவர்!!!

@கருப்பு கருணா

வெட்டித்தனமான செலவுகள், வீண் ஆடம்பரங்கள், தேவையற்ற பகட்டுக்கள், பிரமாண்டம் என்ற பெயரிலான ஊதாரித்தனங்கள், நடிகர்களின் பகாசூர சம்பளம் போன்றவற்றையெல்லாம் விட்டொழிக்காதவரை தமிழ்ச்சினிமாவை அன்புச்செழியன்களிடமிருந்து காப்பாற்றவே முடியாது.

@வாசுகி பாஸ்கர்

நித்தி வீடியோ உண்மை என்பது வந்தப்பவே தெரியும், இரட்டை இலை ops eps க்கு தான் கிடைக்குமென்பதும் சர்ச்சை எழுந்தப்பவே தெரியும், மோடி ஆட்சிக்கு வந்தா நீதிமன்றமே சொல்லி ராமர் கோவில் கட்டப்படுமென்பதும் உறுதியா தெரியும்.

தெரிஞ்சதை ஏன் இவ்ளோ லேட் லேட்டா சொல்றாங்க; செய்றாங்க தெரியலை!

-லாக் ஆஃப்

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon