மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

பெட்ரோலியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி?

பெட்ரோலியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி?

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு வருவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

நவம்பர் 21ஆம் தேதி போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச மாநில நிதியமைச்சர் ஜெயந்த் மலையா கூறுகையில், “பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்து பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கான அரசின் வருவாய் விவரங்களைக் கணக்கிட்டு அதன் பின்னரே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அரசின் வருவாய் குறைந்து வருவது உண்மைதான். ஆனால் தற்போது இயல்பு நிலை திரும்பி, வரி வருவாய் உயரத் தொடங்கியுள்ளது” என்றார்.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மத்தியப் பிரதேச அரசானது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தலா 3 மற்றும் 5 சதவிகிதம் குறைத்து அறிவித்தது. மேலும், டீசலுக்கான கூடுதல் செஸ் வரியும் (லிட்டருக்கு ரூ.1.50) திரும்பப் பெறப்பட்டது. இதனால் மத்தியப் பிரதேசத்தின் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் மற்றும் சட்டிஸ்கரில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலையை விட மத்தியப் பிரதேசத்தில் குறைந்துள்ளதாக ஜெயந்த் மலையா கூறியுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon