மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

மாணவர்களுக்காகத் தனிப் பேருந்து இயக்காதது ஏன்?

மாணவர்களுக்காகத் தனிப் பேருந்து இயக்காதது ஏன்?

மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு தனி பேருந்து இயக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதிலும் அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் இலவசப் பயணம் செய்யும் பஸ் பாஸ் வசதியை தமிழக அரசு கொடுத்துள்ளது. அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் அதிக அளவில் தொங்கிக்கொண்டும், பேருந்து மேற்கூரையில் ஏறியும் ஆபத்தான பயணம் செய்வது அதிகரித்துவருகிறது. மாணவர்களின் இப்படிப்பட்ட பயணங்களால் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன், மாணவர்களும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒரு மனு தாக்கல் செய்தார். மாணவர்கள் பேருந்து மேற்கூரைகளில் பயணம் செய்தல், படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்தல் ஆகிய புகைப்படங்களையும் ஆதாரமாகக் காட்டி அவர் முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (நவம்பர் 23) விசாரித்த உயர் நீதிமன்றம், பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க மாணவர்களுக்குத் தனியாகப் பேருந்து இயக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியது. இது தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் நாளை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon