மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

இனி ஆட்டம் அதிகரிக்கும்!

இனி ஆட்டம் அதிகரிக்கும்!

இரட்டை இலை சின்னம் தற்போது ஒருங்கிணைந்த அணியினருக்கு கிடைத்துள்ள சூழ்நிலையில், இனி ஆட்டம் அதிகரிக்கும், அழிவு விரைவுபடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை, ஒருங்கிணைந்த எடப்பாடி-பன்னீர் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று ( நவம்பர் 23) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைத்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: இனி ஆட்டம் அதிகரிக்கும்.... அழிவும் விரைவுபடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில்,"ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: அப்புறமென்ன... இனி ஆர்.கே. நகர் தேர்தல் அவசரமாக நடத்தப்படும். உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,"வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த அணியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.இரட்டை இலை எடப்பாடி தரப்பிற்கே கிடைக்கும் என்று பாஜகவினர் பலமுறை கூறி வந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon