மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

`ஜோக்கர்’ இயக்குநர் படத்தில் ஸ்வேதா

`ஜோக்கர்’ இயக்குநர் படத்தில் ஸ்வேதா

ஜோக்கர் படத்தின் இயக்குநர் ராஜுமுருகன் எழுத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது முதல் படைப்பான குக்கூ படத்தின் மூலமே பலரது கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் ராஜுமுருகன். அப்படத்திற்குப் பின்னர் முழுக்க அரசியல் பேசும் படமாக ஜோக்கர் படத்தை தந்தார். இந்தப் படம் அவருக்குத் தேசிய விருதைப் பெற்று தந்ததுடன் சர்வதேச அங்கீகாரமும் கிடைத்தது. தற்போது, அடுத்த படத்திற்கான பணியில் இறங்கி விட்டார். ஆனால் அந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பணிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு இயக்கத்தை அறிமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரனிடம் ஒப்படைத்து விட்டார்.

இந்தப் படத்தில் ரங்கா கதாநாயகனாக நடிக்கிறார். `மசான்’ இந்திப்படம் மூலம் புகழ்பெற்ற ஸ்வேதா திரிபாதி நாயகியாக நடிக்கிறார். ஜியாண்ட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, மாநகரம் படத்தில் பணியாற்றிய செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அறிவிப்புகள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon