மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

மாணவர்களுக்கு ஏ.சி., ஃபிரிட்ஜ் மெக்கானிக் இலவசப் பயிற்சி!

மாணவர்களுக்கு ஏ.சி., ஃபிரிட்ஜ் மெக்கானிக் இலவசப் பயிற்சி!

ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஏ.சி., ஃபிரிட்ஜ் மெக்கானிக் பயிற்சி வழங்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர் ஜி.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் ஏ.சி. மற்றும் ஃபிரிட்ஜ் மெக்கானிக் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதம் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு ஆண்களும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சக் கல்வி தகுதியாக 8ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் 50 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கும் இந்தப் பயிற்சி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறும்.

பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பல்கலைக்கழக வளாகத்திலேயே நடைபெறும். இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் விண்ணப்பங்களை 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளத் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், சிபிடிஇ கட்டிடம், கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600 025 என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி எண் 044-22358601. செல்போன் எண் 98404-67267 என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon