மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

திரைத்துறைக்கு உதவுவோம்!

திரைத்துறைக்கு உதவுவோம்!

மத்திய அரசு மூலம் தமிழக திரைத்துறைக்கு உதவ முயற்சிக்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (நவம்பர் 23) சென்னை வந்தார். அவரை வரவேற்கச் சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “அசோக் குமாரின் தற்கொலைக்குப் பிறகுதான் திரைத்துறையில் நிகழும் கந்து வட்டி பிரச்சினை வெளியே தெரியவருகிறது. திரைத்துறைக்கு நிதி உதவிக் குழுவையோ அல்லது வங்கிகள் மூலம் நிதி உதவியோ அளிக்க முடியுமா என்பதை அலசி ஆராய்ந்து விரைவில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். இந்த வகையில் திரைத்துறையினருக்கு உதவ முயற்சிப்போம்" என்றார்.

கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அசோக் குமாருக்கு ஆதரவாக நேற்று ட்விட்டரில் சில பதிவுகளையும் தமிழிசை இட்டிருந்தார். அதில், “தன் துறை சார்ந்த துக்கம், தன்னை ஏற்றிவிட்ட துறையில் பெரும் துயரம். பகிர்ந்துகொள்ளா கொடூர அமைதி. திடீர் ட்விட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான் வேண்டும்!” என்று நடிகர் கமலை மறைமுகமாகச் சாடியிருந்தார். இதையடுத்து நடிகர் கமல் 2 நாள் அமைதியைக் கலைத்து இன்று காலை அசோக் குமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon