மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

ஜூலைக் காற்றில்: காதல் அல்ல உறவுகள் பற்றியது!

 ஜூலைக் காற்றில்: காதல் அல்ல உறவுகள் பற்றியது!

மறைந்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஜீவாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கே.சி.சுந்தரம். இவர் இயக்குநராக அறிமுகமாகும் ஜூலைக் காற்றில் படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய சுந்தரம், “இந்தப் படம் காதலைப் பற்றியதல்ல, உறவுகளைப் பற்றியது. படம் மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது. அவர்கள் காதலையும் பிரிவையும் எவ்வாறு கையாளுகின்றனர் என்பதை பேசும் படமாக இருக்கும். கதை சொல்லும் முறையில் புதிய முறையை உபயோகித்துள்ளேன். ஒரே காட்சியை வெவ்வேறு நபர்களின் பார்வையில் கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

நேரம், அமர காவியம், பிரேமம் ஆகிய படங்களில் துணை நடிகராக வலம்வந்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார். சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நடித்துள்ள அஞ்சு குரியன் கதாநாயகியாக நடித்துள்ளார். சம்யுக்தா மேனன் மற்றொரு கதாநாயகியாக வருகிறார். இவர் கிருஷ்ணா நடித்த களரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். நகைச்சுவை நடிகர் சதிஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். சென்னை, கோவா, கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon