மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

புதிய நீதிபதி பதவியேற்பு!

புதிய நீதிபதி பதவியேற்பு!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சத்ருகானா புஜஹரி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக இன்று (நவம்பர் 23) பதவியேற்றார். இதைத் தொடர்ந்து,சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 75. தற்போது, 53 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ருகானா புஜஹரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சத்ருகானா புஜஹரிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து, நீதிபதிகளின் காலியிடங்கள் 21ஆகக் குறைந்துள்ளது.

1987ஆம் ஆண்டில் ஒடிசா பார் கவுன்சிலில் நீதிபதி சத்ருகானா புஜஹரி வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டார். 2003ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் கூடுதல் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்றார். இதையடுத்து, பூரி, கட்டாக் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகப் பதவி வகித்தார். ஒடிசா மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு மற்றும் பல்வேறு தீர்ப்பாயங்களில் பணியாற்றிய பின்பு, ஒடிசா மாநில சட்டத் துறைச் செயலாளராகவும் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி ஒடிசா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இதைத் தொடர்ந்து தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டு,இன்று பதவியேற்றுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon