மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

வரி செலுத்திய 43 லட்சம் நிறுவனங்கள்!

 வரி செலுத்திய 43 லட்சம் நிறுவனங்கள்!

அக்டோபர் மாதத்துக்கான வரித் தாக்கலில் சுமார் 43.67 லட்சம் தொழில் நிறுவனங்கள் முதற்கட்ட ஜிஎஸ்டிஆர் - 3பி ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளதாக ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்துக்கான முதற்கட்ட ஜிஎஸ்டிஆர் -3பி சேல்ஸ் ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி நவம்பர் 20ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 56 நிறுவனங்கள் சரியான தேதிக்குள் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளன. அதாவது மொத்தம் 43.67 லட்சம் நிறுவனங்கள் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளன. ஜிஎஸ்டி அமலான பிறகு தாக்கல் செய்யப்படும் அதிகபட்ச அளவு இது என்று ஜிஎஸ்டிஎன் நெட்வொர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 33.98 லட்சம் நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதத்தில் 28.46 லட்சம் நிறுவனங்களும், செப்டம்பர் மாதத்தில் 39.33 லட்சம் நிறுவனங்களும் வரி ரிட்டன்களைக் கடைசித் தேதிக்குள் தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜிஎஸ்டிஎன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. வரித் தாக்கலுக்கான கடைசி நாளான நவம்பர் 20ஆம் தேதியில் மட்டும் சுமார் 14.76 லட்சம் பேர் ஜிஎஸ்டி நெட்வொர்க் போர்டலில் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக (73.09%) பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக தொழில் நிறுவனங்கள் வரித் தாக்கல் செய்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon