மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

அதர்வா - மேகா :கலர்ஃபுல் கூட்டணி!

 அதர்வா - மேகா :கலர்ஃபுல் கூட்டணி!

தனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் மேகா ஆகாஷ் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் ‘லை’ படத்தில் நடித்து பரவலாக கவனம் பெற்றாலும் மேகா ஆகாஷ் தமிழ்ப் படங்களில் ஆர்வம் காட்டுகிறார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ஒரு பக்க கதையிலும் மேகா நடித்துள்ளார். தற்போது அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் மேகா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதன் இயக்குநர் கண்ணன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். படத்தை கண்ணன் தயாரிக்கிறார்.

“மேகா சத்தமில்லாமல் முக்கியமான நடிகையாக உருவாகிவருகிறார். துடிப்பான, நேருக்கு நேர் பேசக்கூடிய விஸ்காம் மாணவியாக நடிக்கிறார். அவர்தான் இந்தக் கதாபாத்திரத்திற்குச் சரியாக வருவார் என முடிவுசெய்து அவரை ஒப்பந்தம் செய்தோம்” என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் இசையமைப்பாளர் ராதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. “ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி அதன் பின் சென்னை, கல்லிடைக்குறிச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon