மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்துஜா

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்துஜா

`மேயாத மான்' படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து கவனம்பெற்ற இந்துஜா, ‘அட்ஜெஸ்ட்’ செய்தததால்தான் அடுத்த படத்தில் நாயகி வாய்ப்பு கிடைத்தது என்ற வதந்திக்குக் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார் இந்துஜா.

மேயதாமான் இந்துஜா ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பில்லா பாண்டியில் நடிக்க அட்ஜெஸ்ட் செய்ததால்தான் அவருக்கு நாயகி வாய்ப்பு கிடைத்தது என்று ஒரு வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ மறுப்பு தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் காட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார் இந்துஜா.

“முதன் முறையாக இப்படி ஒரு வதந்தியைச் சந்திக்க நேர்ந்துள்ளது. இது மிகவும் வேடிக்கையான ஒன்றாக இருக்கிறது. வதந்தி பரப்பியவர்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். மேயாத மான், மெர்க்குரி படங்களுக்குப் பிறகு பில்லா பாண்டியில் எனக்கு நாயகி வாய்ப்பு கிடைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் நான் மெர்க்குரி படத்திலே நாயகியாக முதலில் ஒப்பந்தமாகிவிட்டேன்” என்று பதிவிட்டிருந்தார்.

“சினிமாவில் பணிபுரிவதால் எத்தகைய பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் முந்தைய சினிமா போல தற்போதைய சினிமா இல்லை. நல்ல திறமையுள்ள, கடினமாக உழைக்கக் கூடிய, சினிமா மீது காதல் கொண்டவர்கள் தற்போது நிலைக்க முடியும். வாய்ப்புக்காக போராட வேண்டியிருக்கிறது. ஆனால் ஈஸியாக வதந்தியைப் பரப்பி விடுகிறார்கள். இந்த மாதிரியான கீழ்த்தரமான செயல்களை தயவு செய்து விட்டு விடுங்கள். விளம்பரத்திற்காக இத்தகைய செயல்களை செய்ய வேண்டும். சினிமாவை நேசியுங்கள். பெண்களுக்கு மதிப்புத் தாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon